Tuesday, October 16, 2012
மீனவர்கள் மீது கடும் தாக்குதல்! மூவர் பலியாகியிருக்கலாமென அச்சம்
மாத்தறை, குடாவெல்ல பகுதிக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கடலில் மூழ்கி பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுவதுடன் இருவர் காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கடற்கொள்ளையர்களே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
தங்காலை நடுக்கடலில் ஆறு மீனவர்கள் படகில் பயணித்துக் கொண்டிருந்தவேளை, பிறிதொரு படகில் வந்த 10 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியதாகவும் இதில் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் இருவர் காயமடைந்த நிலையில் தப்பித்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் தாக்க வந்தவர்களுடன் தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
தாக்குதலின் பின் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இருவரை கடற் படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக தென் மாகாண மீன்பிடி அமைச்சர் டி. வி. உபாலி தெரிவித்தார்.
இதேவேளை, காணாமல் போன மூன்று மீனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment