Wednesday, October 31, 2012

தொடரும் அடைமழையால் இடம்பெயர்வுகள் அதிகரிப்பு


அனர்த்தங்கள் காரணமாக 1,917 குடும்பங்களைச் சேர்ந்த 7,434 பேர் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
கடும் மழை காரணமாக இதுவரை 68,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடும் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்வடைந்துள்ளது.
44 வீடுகள் முற்றாகவும் 800 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நீலம் சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையின் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அடுத்த 9 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment